செய்திகள்

திவால் சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல்: மத்திய மந்திரிசபை வழங்கியது

திவால் சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் திவால் சட்டத்தின் இரண்டாவது திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த மசோதாவானது, திவால் நடைமுறையில் ஏற்படுகிற சில சிக்கல்களை களைவதற்கு வழி வகுக்கிறது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், உள்கட்டமைப்பு முதலீடு அறக்கட்டளையை தொடங்குவதற்கும் மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை அளித்தது.

உருக்கு துறையில் நீடித்த வளர்ச்சி பெறுவதற்காக ஜப்பான் நாட்டின் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தவும் மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை வழங்கியது.

SCROLL FOR NEXT