செய்திகள்

2015 முதல் நடைபெற்ற ஊடுருவல்கள் குறித்து தற்போதைய பிரதமரிடம் ஜேபி நட்டா விளக்கம் கேட்பாரா? - ப.சிதம்பரம்

2015 முதல் நடைபெற்ற ஊடுருவல்கள் குறித்து தற்போதைய பிரதமரிடம் பா.ஜனதா தலைவர் ஜேபி நட்டா விளக்கம் கேட்பாரா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுடெல்லி

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 பேர் காயம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மோதலால் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

லடாக் எல்லை மோதல் குறித்து சமூக வலைதளத்தில் காங்கிரஸ்- பா,ஜனதா தலைவர்கள் மோதி வருகின்றனர்

பாஜக தலைவர் ஜே.பி.நடா இந்தியாவின் வீரர்களை அவமதிக்க வேண்டாம் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரசை கெட்டு கொண்டார். மேலும் முன்னாள் பிரதமரின் ஆட்சிக் காலத்தில் 600 சீன ஊடுருவல்கள் நடந்ததாகக் கூறினார்.

இன்று, காங்கிரஸ் தலைவர் பி.சிதம்பரம், த்னது டுவிட்டரில் 2015 முதல் 2264 சீன ஊடுருவல்களை விளக்க தற்போதைய பிரதமரிடம் கேளுங்கள்? அவர் அந்த கேள்வியைக் கேட்கத் துணிய மாட்டார் என்று நான் நினைக்கிறேன்.

காங்கிரஸ் ஆட்சியில் சீன ஊடுருவல்கள் இருந்தன, ஆனால் எந்தவொரு இடமும் ஆக்கிரமிக்கப்படவில்லை, இந்திய வீரர்கள் உயிரிழக்கவும் இல்லை.

2015 முதல் நடைபெற்ற ஊடுருவல்கள் குறித்து தற்போதைய பிரதமரிடம் ஜேபி நட்டா விளக்கம் கேட்பாரா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார் என கூறி உள்ளார்.