செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி அடுத்த அனுமந்தை ஊராட்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் சத்யா தலைமையில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னர் இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் 6 அணிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.30 ஆயிரம், 2-வது பரிசு ரூ.20 ஆயிரம், 3-வது பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.
ஒட்டு மொத்த சாம்பியன் பரிசை லிட்டில் ஸ்டார் அணியினர் வென்றனர். அவர்களுக்கு கோப்பை களை சத்யா வழங்கினார். மேலும் 500 பேருக்கு அன்னதானங்களை அவர் வழங்கினார்.
சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பஜார் வீதியில் நடந்தது. இதற்கு முன்னால் ஊராட்சி தி.மு.க. செயலாளர் கே.பி.ராஜன் தலைமை தாங்கினார்.
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கதிரவன், ஒன்றிய இளைஞர் அணி துணை செயலாளர் கே.ஆர்.சி.ஜெ.ரத்திஷ். முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ.அன்பரசன், வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் எம்.கே.தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினர்.
பின்னர் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கினா. விழாவில் சிங்கை சரத், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் பாஸ்கர், குமரன், சண்முகம். துலுக்கானம், பாரேரி ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒரகடம், சென்னகுப்பம் பகுதிகளில் குன்றத்தூர் ஒன்றிய தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சிலம்புச் செல்வன் தலைமையில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.