மாவட்ட செய்திகள்

ஆத்தூர் அருகே கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

ஆத்தூர் அருகே கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஆத்தூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தென்னங்குடி பாளையம் கிராமம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆசர். இவரது மகன் விஜய் (வயது 23), கூலித்தொழிலாளி. ஆத்தூர் ஜோதி நகரை சேர்ந்த ஒரு வியாபாரியின் 17 வயது நிரம்பிய மகள், ஆத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவரை விஜய் கடந்த 3.4.2019-ந் தேதியன்று ஆசை வார்த்தை கூறி கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களுக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஆத்தூர் போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் கேசவன் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விஜய் கைது செய்யப்பட்டார். மாணவி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT