மாவட்ட செய்திகள்

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாயல்குடி,

கடலாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கடலாடி வட்டம் கிளைச் செயலாளர் சரவணகுமார், இணைச்செயலாளர் களஞ்சியம், துணைத் தலைவர் தங்கராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்ட கிளை துணைத்தலைவர்கள் மணிகண்டன், கோவிந்த ராஜன், இணைச் செயலாளர் சரவணன் காந்தி, துணைத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட துணை தலைவர் முத்துராமலிங்கம், மாவட்ட இணைச் செயலாளர் பால முருகன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட் டத்தில் பழைய பென்சன் திட்டம் நடைமுறைப் படுத்தவும் அகவிலைப்படி உயர்வு சரன் விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. கிளை துணைத்தலைவர் முருகேசன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் அனைத்து துறை அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.