மதுரை,
மதுரை அண்ணா நகர் போலீசார் வண்டியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள சுடுகாட்டு பகுதியில் சென்றபோது 2 பேர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் அண்ணா நகர் ஜக்காத்தோப்புவை சேர்ந்த சதாம் என்ற சதாம் உசேன் (வயது 30), அண்ணாநகர் ராஜா (30) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்களை சோதனை செய்தபோது 2 அரிவாளை மறைத்து வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.