மாவட்ட செய்திகள்

ரேஷன் அரிசியுடன் 3 பேர் கைது

600 கிலோ ரேஷன் அரிசியுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கமுதி,

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே மேலக் கொடுமலூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதில் 600 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அரிசி மற்றும் கடத் தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்டதாக மதுரை- ஐராவதநல்லூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது22). காம ராஜபுரம் பகுதியை சேர்ந்த சின்னத்துரை (30), திரு.வி.க. நகரை சேர்ந்த விஜயபாண்டி (25) ஆகிய 3 பேரையும் பிடித்து ராமநாதபுரம் குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT