மாவட்ட செய்திகள்

ரேஷன் அரிசியுடன் 3 பேர் கைது

3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை,

மதுரையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக தகவல் வந்தது. அதன்படி போலீசார் ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஜீப்பை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில் 60 பிளாஸ்டிக் சாக்கில் 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. உடனே அந்த வண்டியில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் வண்டி உரிமையாளரும், டிரைவருமான மதுரை சாத்தையா நகரை சேர்ந்த கதிர்வேல் (வயது 24), கரும்பாலை கிழக்கு தெருவை சேர்ந்த கார்த்திக் (23), அவனியாபுரம் முனீஸ்வரன் (21) என்பதும், அவர்கள் ரேஷன் அரிசியை கடத்தி செல்வதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து, வண்டியுடன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT