மாவட்ட செய்திகள்

வாலிபரை எரித்துக்கொன்ற 3 பேர் கைது

வாலிபரை எரித்துக்கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்புவனம்,

திருப்புவனம் வைகை ஆற்றில் கிணற்றின் அருகே கடந்த 15-ந் தேதி வாலிபர் எரித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் விசாரணையில் எரித்துக்கொலை செய்யப் பட்டவர் திருப்புவனம் புதூரை சேர்ந்த பாலாஜி (வயது33) எனவும் இவர் மீது பல வழக்குகள் உள்ளன எனவும் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த கொலை வழக்கில் திருப்புவனம் பகுதியை சேர்ந்த அஜித் (24), ராமச்சந்திரன் (36), பிரகாஷ் (25) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT