நொய்யல்,
மரவாபாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் இ-சஞ்சீவினி செயலி குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் சுகாதாரத்துறை (கரூர் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம்) இ- சஞ்சீவினி செயலி குறித்த பயிற்சி அளிக்கும் டாக்டர் பொன்ராஜ் தலைமையில் கிராம சுகாதார செவிலியர் சரஸ்வதி மற்றும் சுகாதாரத்துறையினர் கொண்ட குழுவினர் கலந்துகொண்டு சுகாதாரத்துறை சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இ-சஞ்சீவினி செயலி குறித்த விளக்க உரையாற்றினார்கள். பொதுமக்கள் தங்களது செல்போன் மூலம் இ-சஞ்சீவினி செயலியை இறக்கி அதன் மூலம் தங்களது மொபைல் எண் மற்றும் முகவரிகளை பதிவு செய்து செய்தால் போதும் பொதுமக்கள் 24 மணி நேரமும் இ- சஞ்சீவினி செயலியை பயன்படுத்தி அதன் மூலம் மருத்துவர்களிடம் ஆலோசனைகள் பெறலாம். தங்களுக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் மருத்துவர்களிடம் செயலி மூலம் ஆலோசனை பெறலாம். உங்களுக்குள்ள நோயின் அடிப்படையில் அந்த மருத்துவர் உங்களது வாட்ஸ் அப் எண்ணிற்கு உரிய மருந்து, மாத்திரைகள் குறித்து தகவல் தெரிவிப்பார்.எனவே பொதுமக்கள் தங்களுக்கு எந்த நோய் ஏற்பட்டாலும் உடனுக்குடன் இந்த செயலியை பயன்படுத்தி கொள்ளுமாறு மருத்துவர் தெரிவித்தார். அப்போது இ -சஞ்சீவினி செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கம் அளித்தார். இதில் மரவாபாளையம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.