மாவட்ட செய்திகள்

முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் - மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் பங்கேற்கவில்லை

முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் பங்கேற்கவில்லை.

புதுச்சேரி,

புதுவை அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை சட்டசபை வளாகத்தில் உள்ள கேபினட் அறையில் நடந்தது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன் , தலைமைச் செயலாளர் அஸ்வனிகுமார், நிதித்துறை செயலாளர் சுர்பீர் சிங், சுகாதாரத்துறை செயலாளர் அருண், மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் புதுவை சட்டப்பேரவையை எப்போது கூட்டுவது, அரசின் 2020-21ம் ஆண்டிற்கான கூடுதல் செலவினங்கள், அரசு பள்ளிகளுக்கு தலைவர்கள் பெயரை சூட்டுதல், அனைவருக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் சாராயம், கள் கடைகளில் கொரோனா காலத்திற்காக அதிகமாக விதிக்கப்பட்ட கிஸ்தி தொகையை ரத்து செய்வது உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பங்கேற்கவில்லை.

SCROLL FOR NEXT