கரூர் 
மாவட்ட செய்திகள்

தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அரவக்குறிச்சியில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரவக்குறிச்சி,

அரவக்குறிச்சி உள்பட தமிழகத்தில் 10 இடங்களில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் பொன்முடி அறிவித்தார். இதையடுத்து அரவக்குறிச்சி ஏ.வி.எம். கார்னர் பகுதியில் அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.எஸ்.மணியன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் என். மணிகண்டன், அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ஜெயந்திமணிகண்டன் மற்றும் தி.மு.க.வினர், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர்.

SCROLL FOR NEXT