மாவட்ட செய்திகள்

ஆஸ்பத்திரியில் செல்போன் திருடியவர் கைது

பாளையங்கோட்டை சித்த மருத்துவ ஆஸ்பத்திரியில் செல்போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:

ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் உடல்நிலை சரியில்லாமல் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருடைய செல்போனை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, மேல கருவம்பட்டியை சேர்ந்த பால்துரை என்பவர் ரமேசின் செல்போனை திருடியது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து, செல்போனை பறிமுதல் செய்தனர்.