மூதாட்டியிடம் 6 பவுன் தங்க சங்கிலியை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கிலி பறிப்பு
மணப்பாறை புதுகாலனியைச் சேர்ந்தவர் ராமானுஜம் அம்மாள் (வயது 67). இவர் நேற்று காலையில் வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் அவர் அணிந்து இருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துகாண்டு தப்பினர்.
இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலி பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.