கோவை,
கோவை மாவட்டத்தில், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
இந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விவரம் வருமாறு:-
1. கோவை வடக்கு- முருகேசன் (சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர். 94422-92741.)
2. கோவை தெற்கு- சிவசுப்பிரமணியன் (மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையாளர், 94892-06055.)
3. சிங்காநல்லூர்- ராம்குமார் (மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி, 94430-89804)
4. கவுண்டம்பாளையம்- ரவிச்சந்திரன் (ஆர்.டி.ஓ. கோவை வடக்கு, 94459-24164)
5. சூலூர்- வி.சாந்தி ( நகர்புற நிலவரி உதவி ஆணையர், 99949 68613.)
6. தொண்டாமுத்தூர்- செந்தில் அரசன் ( ஆர்.டி.ஓ. கோவை தெற்கு, 94450-00442).
7. மேட்டுப்பாளையம்- குமரேசன் (மாவட்ட வழங்கல் அதிகாரி, 94450 00245.)
8. கிணத்துக்கடவு- அம்சவேணி (மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி, 94454-77853)
9. பொள்ளாச்சி- வைத்திநாதன், (சப்-கலெக்டர், பொள்ளாச்சி, 94450-00445.
10. வால்பாறை- துரைசாமி, (மாவட்ட ஆய்வுக்குழு அதிகாரி 63827-93328).
கோவை மாவட்டத்தில் செலவின கண்காணிப்புக்காக 30 பறக்கும் படை குழுக்கள், 30 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 20 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும், தேர்தல் ஆணையத்தால் கொண்டு வரப்பட்ட C-Vigil செயலி மூலம் புகார்களை பொதுமக்கள் வீடியோ அல்லது புகைப்படம் மூலம் பதிவு செய்யலாம்.
வாக்குப்பதிவின் போது தேர்தல் பணிக்காக மொத்தம் 21 ஆயிரத்து 500 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் 353 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு அதற்கான மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.