மாவட்ட செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு வேண்டாம் என விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம்

திருவாரூரில் மீண்டும் முழு ஊரடங்கு வேண்டாம் என விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வர்த்தகர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர்.

திருவாரூர்,

திருவாரூரில் மீண்டும் முழு ஊரடங்கு வேண்டாம் என விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வர்த்தகர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர். கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நடைமுறைப்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து திருவாரூர் நகராட்சி சார்பில் கொரோனா நோய் தொற்று குறித்து ஒலிபெருக்கி வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் வர்த்தகர்கள் பொதுமக்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு வேண்டாம் என துண்டு பிரசுரங்களையும் முககவசங்களையும் வழங்கினர்.

மேலும் வர்த்தக நிறுவனங்களில் உள்ளவர்கள், வாடிக்கையாளர்கள் அவசியம் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என விழிப்புணர்வு செய்தனர். அப்போது திருவாரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா, நகராட்சி துப்பரவு அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் இருந்தனர்.

SCROLL FOR NEXT