மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி நடந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணிகள் 54 மற்றும் 56 சார்பில், நாட்டு நலப்பணித்திட்ட 50-வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் கல்லூரியில் நடந்தது.

கல்லூரி முதல்வர் நாகராஜன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறை தலைவர் காசிராஜன் வாழ்த்துரை வழங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி தேவராஜ் வரவேற்றார். இந்த போட்டிகளை சாத்தான்குளம் தாசில்தார் ஞானராஜ் தொடங்கி வைத்தார்.

பள்ளி மாணவ-மாணவிகளுக்காக நடந்த இந்த போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 300 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கருணாகரன் மற்றும் தூத்துக்குடி நகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் பாலசிங், சிலம்பாட்ட பயிற்றுனர் கார்த்திக், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் செய்து இருந்தனர்.

SCROLL FOR NEXT