மாவட்ட செய்திகள்

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

துறையூர், மார்ச்.8-
திருச்சி திருவானைக்கோவில் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி. இவரது மகன் சரத் (24). இவர் உள்பட 20 பேர் கொண்ட குழுவினர் துறையூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மணவறை அலங்காரம் செய்வதற்காக வேலைக்கு சென்றனர். அப்போது, ஒரு பெரிய இரும்பு பைப்பை சரத் தூக்கி சென்ற போது, அந்த பைப் மண்டபத்தின் வெளியில் செல்லும் உயர் அழுத்த மின் கம்பியில் உரசியது. இதில் அந்த பைப் வழியாக மின்சாரம் சரத் உடலில் பாய்ந்தது. இதில் சரத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.