வரட்டுப்பள்ளம் அணை
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இங்குள்ள வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக பர்கூர் மலைப்பகுதியின் அடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணைக்கு மாலை நேரத்தில் வந்து செல்லும். இதனால் அணையின் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் யாரும் நுழைந்து விடாதபடி அணையின் மேல் பகுதியில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு அதில் இரும்பு கதவு போடப்பட்டு உள்ளது.
கதவு சேதம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீர் குடிக்க வந்த யானை ஒன்று அணையின் மேல் பகுதிக்கு சென்று உள்ளது. பின்னர் அங்குள்ள நுழைவு வாயிலுக்கு சென்ற அந்த யானை அங்கிருந்த இரும்பு கதவை உடைத்து சேதப்படுத்தியது. சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்த யானையானது அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.
இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் வனச்சரகர் உத்தரசாமி மற்றும் பொதுப்பணித்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அணையின் நுழைவு வாயிலில் உள்ள இரும்பு கதவை பார்வையிட்பயணிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம். மேலும் அணைப்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளுக்கு சுற்றுலா பயணிகள் யாரும் உணவுப்பொருட்களை வழங்க வேண்டாம், என்றார்.