மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஈரோடு, கவுந்தப்பாடியில் பா.ஜ.க. வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டாடினார்கள்.

ஈரோடு,

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பா.ஜ.க. அதிகமான இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. இதை கொண்டாடும் விதமாக ஈரோட்டில் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்தனர்.

ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, பஸ் நிலையம், பன்னீர்செல்வம் பூங்கா, காளைமாட்டுசிலை ஆகிய இடங்களில் பா.ஜ.க.வினர் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்று பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT