கிருஷ்ணராயபுரம்
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலையோரத்தில் குடியிருப்பு பகுதிகள் உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசதித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளில் உள்ள குப்பைகள் அனைத்தும் கரூர்-திருச்சி சாலையோரங்களில் குவியல், குவியலாக கொட்டி வைக்கப்படுகிறது.
இதனால் அந்த வழியாக ஒன்றிய அலுவலகம், தோட்டக்கலைதுறை அலுவலகம், கால்நடை மருந்தகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள், பாதாசாரிகளுக்கு துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பிடித்து செல்லும் நிலை உள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வந்து உடனடியாக கிருஷ்ணராயபுரம் முதல் மாயனூர் வரை சாலையோரங்களில் அந்த அந்த குடியிருப்பு முன்பு குப்பை தொட்டிகளை வைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.