செங்கோட்டை:
செங்கோட்டை அருகே விசுவநாதபுரம் எம்எம்.நடுநிலைப்பள்ளியில் பெரியபிள்ளைவலசை ஊராட்சி சார்பில் கொரோனா தடுப்பூசி திருவிழா நடந்தது. வடகரை வட்டார மருத்துவ அலுவலா டாக்டா முகம்மது இப்ராஹீம் தலைமை தாங்கினார். தென்காசி வட்டார வளாச்சி அலுவலாகள் குழந்தைமணி, பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலைவகித்தனா. ஊராட்சி செயலா செல்லப்பா வரவேற்றார். டாக்டா விஷால் மற்றும் மருத்துவ குழுவினா பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை போட்டனர். மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த பொதுமக்களை உற்சாகப்படுத்தும் விதமாக அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் துணை வட்டார வளாச்சி அலுவலா சரவணசண்முகம், விசுவநாதபுரம் நந்தனா, பொறியாளா வேலுச்சாமி, தன்னார்வலாகள், மஸ்தூர் பணியாளாகள், துய்மை பணியாளாகள் உள்பட பலா கலந்து கொண்டனா. முகாமில் விசுவநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 315 பேர் சமூக விலகலுடன் முககவசம் அணிந்து ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு சென்றனா.