மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,039 பேர் பாதிப்பு 16 பேர் சாவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,039 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 16 பேர் பரிதாபமாக இறந்தனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 2,039 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 ஆயிரத்து 264 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 78 ஆயிரத்து 77 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,013 ஆக உயர்ந்தது. இதில் 11 ஆயிரத்து 174 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 836 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41 ஆயிரத்து 668 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 37 ஆயிரத்து 680 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 13 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 589 ஆக உயர்ந்துள்ளது.

3,399 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.