மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரியில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலருக்கான தேர்வு 856 பேர் எழுதினார்கள்

இந்து சமய அற நிலையத்துறை செயல் அலுவலருக்கான தேர்வை கிருஷ்ணகிரியில் 856 பேர் எழுதினார்கள்.

கிருஷ்ணகிரி,

தமிழக அரசின் இந்து சமய அறிநிலையத்துறையில் செயல் அலுவலர் (கிரேடு -3) பதவியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த இரண்டு பணிகளுக்கும் எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு அடிப்படையில் பணி நியமனம் நடைபெறுகிறது.

இந்த நிலையில் நேற்று செயல் அலுவலருக்கான (கிரேடு-3) எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 1,626 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

நேற்று கிருஷ்ணகிரியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 மையங்களில் தேர்வு நடந்தது. இந்த தேர்விற்காக விண்ணப்பித்த 1,626 பேரில், 856 பேர் மட்டுமே எழுதினார்கள். 770 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதே போல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் (கிரேடு - 4)-க்கான எழுத்து தேர்வு அதே 3 மையங்களில் நடைபெறுகிறது. இதற்காக 1,776 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

SCROLL FOR NEXT