புனே,
புனே பரஸ்கானா போலீஸ் நிலையத்தில் ஏட்டு ஆக இருந்தவர் சமீர் செய்யது (வயது48). இவா நேற்று நள்ளிரவு 12.15 மணியளவில் வலை முடிந்து வீடு திரும்பி கொண்டு இருந்தார். இதில் புத்வார்பேத் பகுதியில் சென்ற போது, ரவுடி பிரவின் மகாஜன் (34) போலீஸ்காரரை மறித்து உள்ளார்.
பின்னர் அவர் கூர்மையான ஆயுதத்தால் போலீஸ் ஏட்டை மார்பு, கழுத்து மற்றும் வயிற்றில் சரமாரியாக தாக்கி உள்ளார். தகவல் அறிந்து சென்ற போலீசார் ஏட்டுவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலன்இன்றி உயிரிழந்தார்.
இந்தநிலையில் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஏட்டு சமீர் செய்யதை கொலை செய்த ரவுடியை கைது செய்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரவுடி ஒருவர் போலீஸ் ஏட்டுவை கொலை செய்த சம்பவம் புனேயில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.