மாவட்ட செய்திகள்

வரும் கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகளிலும் மராத்தி பாடம் கட்டாயம் - மந்திரி சுபாஷ் தேசாய் உறுதி

வரும் கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகளிலும் மராத்தி பாடம் கட்டாயமாக்கப்படும் என மந்திரி சுபாஷ் தேசாய் உறுதி அளித்து உள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் பள்ளிகளில் மராத்தி பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான சட்டம் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இருசபைகளிலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில் மராத்தியை கட்டாயம் ஆக்கும் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடந்தது.

கூட்டத்தில் மராத்தி வளர்ச்சிதுறை மந்திரி சுபாஷ் தேசாய், பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வரும் கல்வி ஆண்டில் அமல்

கூட்டத்தில் மந்திரி சுபாஷ் தேசாய், வரும் கல்வி ஆண்டில் (2020-21) 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை பள்ளிகளில் மராத்தி பாடத்தை கட்டாயம் ஆக்கும் வகையில் அதற்குரிய பாடத்திட்டம், புத்தகங்கள், பயிற்சி ஏடுகள் போன்றவற்றை தயார் செய்ய கல்வித்துறை அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

இதேபோல அனைத்து பள்ளிகளிலும் மராத்தி பாடம் கட்டாயம் கற்று கொடுக்க வேண்டியது தொடர்பான அறிவிக்கையை வெளியிடவும் பள்ளி கல்வி துறைக்கு உத்தரவிட்டார்.

மேலும் வரும் கல்வி ஆண்டில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை எல்லா பள்ளிகளிலும் மராத்தி கற்று கொடுப்பது தொடர்பான சட்டம் அமலுக்கு வரும் என வர்ஷா கெய்க்வாட்டுக்கு, சுபாஷ் தேசாய் உறுதி அளித்தார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு