மாவட்ட செய்திகள்

நாகையில், தனியாக நடந்து சென்ற விதவை பெண்ணை தூக்கி சென்று கோவிலில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் - 2 வாலிபர்கள் கைது

நாகையில், தனியாக நடந்து சென்ற விதவை பெண்ணின் வாயில் துணியை வைத்து பொத்தி தூக்கி சென்று கோவிலில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகையை சேர்ந்தவர் 40 வயது விதவைப்பெண், கூலி வேலை செய்து தனது 2 மகள்களை வளர்த்து வருகிறார். ஆண் துணை பாதுகாப்பு இல்லாததால் பாதுகாப்பு கருதி தினமும் இரவு நேரத்தில் தனது மகள்களுடன் அருகில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்று தூங்குவது வழக்கம்.

கடந்த 6-ந் தேதி இரவு அந்த பெண்ணின் மகள்கள் இருவரும் முன்கூட்டியே சென்று விட்டனர். வழக்கம்போல் தனது வீட்டில் இருந்து அந்த பெண் இரவு 9 மணி அளவில் தனது சகோதரி வீட்டுக்கு நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியே ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி அந்த பெண்ணின் அருகில் சென்று அவரின் வாயில் துணியை வைத்து அமுக்கி அருகே இருந்த கோவிலுக்கு தூக்கி சென்றனர். இரவு நேரம் என்பதால் அந்த பகுதியில் ஆட்கள் யாரும் இல்லை.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கு வைத்து அவர்கள் இருவரும் சேர்ந்து நள்ளிரவு 2 மணி வரையில் அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இதில் அந்த பெண் மயங்கி விழுந்துள்ளார். அதன்பின்னரே அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

சிறிது நேரம் கழித்து கண்விழித்த அந்த பெண் தான் அலங்கோலமான நிலையில் கிடப்பதை கண்டு கதறி அழுதாள். பின்னர் நடக்கக்கூட முடியாத நிலையில் அந்த பெண் அங்கிருந்து மெதுவாக நடந்து சென்று அந்த பகுதியில் உள்ளவர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமயான சம்பவத்தை கூறினார்.

பின்னர் அந்த பகுதியில் உள்ளவர்கள் உதவியுடன் அந்த பெண் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர்.

சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பெண்ணை இரண்டு பேர் சேர்ந்து தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினர்.

தீவிர விசாரணையில், அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்த அப்பாஸ் என்கிற அருண்ராஜ்(வயது 24), அக்கரைகுளம் பகுதியை சேர்ந்த ஆனந்த்(25) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான இருவரும் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணின் சகோதரி வீட்டிற்கு சென்று உள்ளனர். அங்கு சென்ற அவர்கள், நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யக்கூடாது. மீறி புகார் செய்தால் கொலை செய்து விடுவோம் என்று அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த சம்பவம் நாகை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு