மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் கலெக்டர் அலுவலக நலத்திட்ட உதவி

திருவள்ளூரில் கலெக்டர் அலுவலக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ.11 ஆயிரத்து 830 மதிப்பில் 3 சக்கர சைக்கிள் மற்றும் மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் போன்றவை வழங்கப்பட்டது. மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வெவ்வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் 4 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையையும் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

அவருடன் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வித்யா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT