மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஒரே நாளில் 62 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா வைரசால் 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரையில் 45 ஆயிரத்து 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 43 ஆயிரத்து 930 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 543 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 703 பேர் இறந்துள்ளனர்.