விருதுநகர்,
விருதுநகர் மார்க்கெட்டில் சமையல் எண்ணெய் விலை உயர்ந்து காணப்பட்டது.
உளுந்து
விருதுநகர் மாவட்டத்தில் உளுந்து 100 கிலோ மூடை ரூ.100 குறைந்து ரூ.9,300 முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.10,400 முதல் ரூ.11,900 வரையிலும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.8,900 முதல் ரூ.9,400 வரையிலும் விற்பனை ஆனது.
பாசிப்பருப்பு 100 கிலோ ரூ.300 குறைந்து மூடை ரூ.11,500 முதல் ரூ.12 ஆயிரம் வரையிலும், பாசிப்பயறு ரூ.8,100 முதல் ரூ. 8,600 வரையிலும் விற்பனையானது.
துவரை 100 கிலோ ரூ.100 விலை குறைந்து மூடை ரூ. 7,100 முதல் ரூ.8,200 வரையிலும், துவரம்பருப்பு ரூ.10,400 முதல் ரூ.11,400 வரையிலும் விற்பனையானது.
பாமாயில்
மல்லி லைன் ரகம் 40 கிலோ ரூ.3,100 முதல் ரூ. 3,200 வரையிலும், மல்லி நாடுரகம் ரூ.4,800 வரை விற்பனையானது.
முண்டு வத்தல் ரூ.28 ஆயிரம் முதல் ரூ.29 ஆயிரம் வரையிலும், ஏ.சி. வத்தல் ரூ.14,700 முதல் ரூ.15,150 வரையிலும், புது வத்தல் ரூ.9,500 முதல் ரூ. 13 ஆயிரம் வரையும் விற்பனையானது.
கடலை எண்ணெய் ரூ.20 விலை உயர்ந்து 15 லிட்டர் ரூ.2,900 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.165 விலை உயர்ந்து ரூ.3,878 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.40 அதிகரித்து ரூ. 2,220 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ. 2 ஆயிரம் ஆகவும் விற்பனையானது.
பொரிகடலை
நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7,500 ஆக விற்பனையானது. கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.450 விலை உயர்ந்து ரூ. 4,600 ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.100 அதிகரித்து ரூ. 2 ஆயிரம் ஆகவும் விற்பனையானது.
சீனி 100 கிலோ ரூ.20 குறைந்து ரூ. 3,560 ஆகவும், கொண்டைக்கடலை குவிண்டால் ரூ.5,400 ஆகவும், பொரிகடலை ரூ. 4,100 ஆகவும், மைதா முதல் ரகம் ரூ.3,520 ஆகவும், 2-ம் ரகம் ரூ.2,620 ஆகவும், ஆட்டா 25 கிலோ ரூ. 900 ஆகவும், ரவை 25 கிலோ ரூ.1, 120 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ.50 விலை உயர்ந்து ரூ.830 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.8,100 ஆகவும், பட்டாணி பருப்பு ரூ.8,300 ஆகவும் விற்பனை ஆனது.
மசூர் பருப்பு ரூ.7,100 ஆகவும் விற்பனையானது. காபி பிளாண்டேஷன் பிபி ரகம் 50 கிலோ ரூ. 13,750 ஆகவும், ஏ ரகம் ரூ.16,250 ஆகவும் சி ரகம் ரூ.11,000 ஆகவும், ரோபஸ்டா ஏ ரகம் ரூ.8 ஆயிரமாகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.7 ஆயிரமாகவும் விற்பனையானது.