மாவட்ட செய்திகள்

பாமாயில் விலை உயர்வு

விருதுநகர் மாவட்டத்தில் பாமாயில் விலை உயர்ந்து காணப்பட்டது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் உளுந்து 100 கிலோ மூடை ரூ.300 விலை குறைந்து ரூ.9,300 முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.10,400 முதல் ரூ.11,900 வரையிலும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.8,900 முதல் ரூ.9,400 வரையிலும் விற்பனை ஆனது. பாசிப்பருப்பு 100 கிலோ மூடை ரூ.11,700 முதல் ரூ.12,200 வரையிலும், பாசிப்பயறு ரூ.8,200 முதல் ரூ. 8,700 வரையிலும் விற்பனையானது.

துவரை 100 கிலோ மூடை ரூ. 6,800 முதல் ரூ.7,900 வரையிலும், துவரம்பருப்பு ரூ.10,100 முதல் ரூ.11,100 வரையிலும் விற்பனையானது.

மல்லி லைன் ரகம் 40 கிலோ ரூ.3,450 முதல் ரூ. 3,550 வரையிலும், மல்லி நாடுரகம் ரூ.5 ஆயிரம் வரை விற்பனையானது. முண்டு வத்தல் ரூ.2 ஆயிரம் விலை குறைந்து ரூ.28 ஆயிரம் முதல் ரூ.29 ஆயிரம் வரையிலும், ஏ.சி. வத்தல் ரூ.14,700 முதல் ரூ.15,150 ஆயிரம் வரையிலும், புது வத்தல் ரூ.500 விலை உயர்ந்து ரூ.9,500 முதல் ரூ. 13 ஆயிரம் வரையும் விற்பனையானது.

கடலை எண்ணெய் 15 லிட்டர் ரூ.2,880 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.3,713 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.30விலை உயர்ந்து ரூ. 2,080 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ. 2 ஆயிரம் ஆகவும் விற்பனையானது.

நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7,500 ஆக விற்பனையானது. கடலை புண்ணாக்கு100 கிலோ ரூ. 4,150ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ. 1,900 ஆகவும் விற்பனையானது.

சீனி 100 கிலோ ரூ. 3,480 ஆகவும், கொண்டைக்கடலை குவிண்டால் ரூ.5,000 ஆகவும், பொரிகடலை ரூ. 3,900 ஆகவும், மைதா முதல் ரகம் ரூ.3,520 ஆகவும், 2-ம் ரகம் ரூ.2,620 ஆகவும், ஆட்டா 25 கிலோரூ. 900 ஆகவும், ரவை 25 கிலோ ரூ.1, 120 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ.15 உயர்ந்து ரூ. 785 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.8,100 ஆகவும், பட்டாணி பருப்பு ரூ.8,300 ஆகவும் விற்பனை ஆனது.

மசூர் பருப்பு ரூ.7,100 ஆகவும் விற்பனையானது. காபி பிளாண்டேஷன் பிபி ரகம் 50 கிலோ ரூ. 13,750 ஆகவும், ஏ ரகம் ரூ.16,250 ஆகவும் சி ரகம் ரூ.11,000 ஆகவும், ரோபஸ்டா ஏ ரகம் ரூ.8 ஆயிரமாகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.7 ஆயிரமாகவும் விற்பனையானது.