பெங்களூரு,
கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் சங்கரமூர்த்தி, ராமச்சந்திரகவுடா, அமர்நாத் பட்டீல், கணேஷ் கார்னிக், ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர்கள் ரமேஷ்பாபு, மரிதிப்பேகவுடா ஆகியோரின் பதவி காலம் நிறைவடைகிறது. இதையடுத்து கர்நாடக தென்கிழக்கு, கர்நாடக தென்மேற்கு, கர்நாடக தெற்கு ஆசிரியர் தொகுதிகள், கர்நாடக தென்மேற்கு, கர்நாடக வடகிழக்கு, பெங்களூரு பட்டதாரி தொகுதிகளுக்கு 8-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி மேற்கண்ட 6 தொகுதிகளில் கடந்த 8-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்குச்சீட்டு முறையில் இந்த தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அடங்கிய வாக்கு பெட்டிகள் பெங்களூரு ஆர்.சி.கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.