சமயபுரம்,டிச.23-
சமயபுரம் அருகே உள்ள தெற்கு ஈச்சம்பட்டி மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 49). இவர் சமயபுரத்தில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார். நேற்றுமுன்தினம் பட்டறையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கரியமாணிக்கம் பிரிவு ரோடு அருகே வந்த போது, தொண்டியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு விரைவு பஸ் அவர் மீது மோதியது. இதில் பலத்தகாயம் அடைந்த அவர் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தேவராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் விழுப்புரம் பகுதியை சேர்ந்த ரகோத்தமன் (47) என்பவரை கைது செய்தனர்.