சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து பணியாற்ற விரும்பும் முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் மத்திய ஆயுதப்படை வீரர்கள், முன்னாள் தீயணைப்பு துறையினர், முன்னாள் வனத்துறையினர், முன்னாள் சிறைத்துறையினர் வருகிற 25-ந்தேதிக்குள் சிவகங்கை மாவட்ட காவல் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை 04575-243265, 8300001277 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்து கொள்ளலாம்.தேர்தல் பணிசெய்பவர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்கப்படுவதுடன், மேலும் அவர்கள் தேர்தலில் தபால் வாக்கு பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.