காவேரிப்பாக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த கங்காதரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 40). தனியார் பால் கம்பெனிக்கு பால் கொள்முதல் செய்து வந்தார். இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வலி அதிகமானதால் வேதனை அடைந்த சங்கர் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்துள்ளார்.
இதைக் கண்ட அவரது மகன் ஜெகதீசன் சங்கரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்கர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஜெகதீசன் பாணாவரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.