வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் கிராமத்தில் உள்ள குளத்தில் மூழ்கி ஒருவர் இறந்து கிடப்பதாக தண்டலம் கிராம நிர்வாக அலுவலர், ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் விசாரணை
குளத்தில் மூழ்கி இறந்தவருக்கு 35 வயது இருக்கும். அவரது இடதுகையில் சிலுவை என்றும், வலது கையில் சாரதி என்றும் பச்சை குத்தப்பட்டிருந்தது. கழுத்தில் சிலுவை போட்ட மணிமாலையும் அணிந்திருந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.