மாவட்ட செய்திகள்

மூங்கில்துறைப்பட்டு அருகே டிராக்டர் கவிழ்ந்து மோட்டார் சைக்கிள்கள் சேதம்

மூங்கில்துறைப்பட்டு அருகே டிராக்டர் கவிழ்ந்து மோட்டார் சைக்கிள்கள் சேதம்

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே கடுவனூர் பகுதியிலிருந்து கரும்புகளை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று மூங்கில்துறைப்பட்டில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சென்றுகொண்டிருந்தது. மேல் சிறுவள்ளூர் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் என்ஜின் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் டிராக்டர் என்ஜினுக்கு அடியில் சிக்கி சேதமானது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்குள்ளான டிராக்டரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.