மாவட்ட செய்திகள்

துறையூர் அருகே வாகனம் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி

துறையூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலியானார்.

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த பச்சைமலை டாப் செங்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 19). இவர் கரட்டாம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

நேற்று குமரேசன் மோட்டார் சைக்கிளில் நண்பர் ஒருவரை ஏற்றிக்கொண்டு கரட்டாம்பட்டியை அடுத்த மீனாட்சிபுரத்திற்கு சென்றார். பின்னர் அவரை அங்கு விட்டு விட்டு மீண்டும் கரட்டாம்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார்.

துறையூர்-திருச்சி மெயின் ரோட்டில் வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று குமரேசன் மீது மோதிவிட்டு நிற்காமல்சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து புலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் குமரேசன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT