மாவட்ட செய்திகள்

வாணியம்பாடி அருகே, சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் - 3 பேர் கைது

வாணியம்பாடி அருகே 12 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாணியம்பாடி,

வாணியம்பாடியை அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் 6-ம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமி அப்பகுதியில் கழிவறை வசதியில்லாததால் கடந்த 6-ந் தேதி இரவு 7 மணிக்கு அங்குள்ள பாலாற்றுக்கு சென்றுள்ளார். அப்போது அந்தப்பகுதியில் மது அருந்திகொண்டிருந்த சந்துரு (வயது 24), பார்த்திபன் (21), கண்ணன் (30) ஆகிய 3 பேர் சிறுமியை பின் தொடர்ந்து சென்று கடத்திசென்றுள்ளனர்.

பின்னர் பீர் பாட்டிலை உடைத்து சிறுமியின் கழுத்தில் வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டி மறைவான இடத்தில் வைத்து 3 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

பின்னர் அந்த சிறுமி சுடுகாட்டில் பிணத்தில் மீது போட்டு பயன்படுத்திய உடைகளை எடுத்து மூடிக்கொண்டு வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை அழுதுகொண்டே கூறியுள்ளார். பின்னர் இது குறித்து நேற்று முன்தினம் வாணியம்பாடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசியிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட சந்துரு, பார்த்திபன், கண்ணன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் 3 பேர் மீதும் சிறுமியை கடத்தி கொலை முயற்சி செய்தது, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி