மாவட்ட செய்திகள்

வானூர் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை கணவர் கைது

வானூர் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை கணவர் கைது

விழுப்புரம்

புதுச்சேரி மாநிலம் சேதராப்பட்டு பகுதியை சேர்ந்தவர் நித்யா (வயது 32). இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த பாரஸ்புரம் பகுதியை சேர்ந்த பொக்லைன் எந்திர டிரைவரான குமணன் (40) என்பவருக்கும் திருமணமாகி ஓராண்டு ஆகிறது. நித்யாவுக்கு குழந்தை இல்லை.இந்த திருமணத்தின்போது நித்யாவின் பெற்றோர், குமணனின் குடும்பத்திற்கு வரதட்சணையாக 9 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் ஆகியவற்றை வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் குமணன், அவரது அண்ணன் ஜெயராமன் (47), அக்காள்கள் வெங்கடேஸ்வரி, சுந்தரி, இவரது கணவர் குருமூர்த்தி, குமணனின் தாய் உலகம்மாள் ஆகிய 6 பேரும் சேர்ந்து நித்யாவிடம் நகைகளை வாங்கி வைத்துக்கொண்டு மேலும் 25 பவுன் நகை, வீடு கட்ட ரூ.2 லட்சம் ரொக்கம், மற்றொரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை அவரது பெற்றோர் வீட்டில் இருந்து வரதட்சணையாக வாங்கி வரும்படி கேட்டு நித்யாவை திட்டி அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து நித்யா, கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் குமணன் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து குமணனை கைது செய்தனர்.