தேனி :
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள க.புதுப்பட்டியை சேர்ந்தவர் கொடிராமன்.
இவரது மகள் சுகப்பிரியா (வயது 22). இவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது சுகப்பிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.