திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சுகாதார மதிப்பீட்டுக் குழு சார்பில் கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். சுகாதார மதிப்பீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் அந்தோணி சகாய சித்ரா வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி மின் மற்றும் தகவல் தொடர்பு துறை இணை பேராசிரியர் வளனரசு 'காப்புரிமை' என்ற தலைப்பிலும், ஓய்வு பெற்ற இந்திய வன சேவை அலுவலர் பால்ராஜ் 'இயற்கையை பாதுகாப்போம்' என்ற தலைப்பிலும், கல்லூரியின் முன்னாள் ஆங்கிலத்துறை தலைவர் தணிகாசலம் 'தலைமை பண்புக்கு தங்களை தயார்படுத்திக் கொள்வது எப்படி' என்ற தலைப்பிலும் பேசினர்.
கருத்தரங்கில், கல்லூரி பேராசிரியர்கள் பாலு, சேகர், செல்வகுமார், மலர்கொடி, கண்ணன், பாகீரதி, சுகாதார மதிப்பீட்டுக் குழு துணை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். சுகாதார மதிப்பீட்டுக் குழு துணை ஒருங்கிணைப்பாளர் ஷோலா பர்னாந்து நன்றி கூறினார்