மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் சமூக இடைவெளியுடன் புத்தாண்டை கொண்டாட அனுமதி - முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் சமூக இடைவெளியுடன் புத்தாண்டை கொண்டாட அனுமதி வழங்கப்படுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டின் அனைத்து பண்டிகைகளும், அரசு விதித்த கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே கொண்டாடப்பட்டது. இந்நிலையில் புத்தாண்டு நெருங்கி வரும் வேளையில், கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தலால் பொது இடங்களில் மக்கள் கூடி புத்தாண்டு பண்டிகையை கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் சமூக இடைவெளியுடன் புத்தாண்டை கொண்டாட அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். கடற்கரை சாலையில் பொதுமக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் புத்தாண்டை கொண்டாடலாம் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து