மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரதம்

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரதம்

சேலம்,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நில உரிமை மீட்பு இயக்கம் சார்பில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா கல்யாணி கிரி படையாச்சியூர் கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு நில உரிமை மீட்பு இயக்க மாவட்ட துணை அமைப்பாளர் அம்மாசி தலைமை தாங்கினார். தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் சரஸ்ராம்ரவி, மாவட்ட துணை அமைப்பாளர் ராமகிருஷ்ணன், படையாச்சியூர் ஊர் தலைவர் மாணிக்கம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கருப்பையா, வேல்முருகன், அரசு முதல்வன், செல்வராஜ், வணங்காமுடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT