மாவட்ட செய்திகள்

வீரமரணமடைந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு நிவாரண நிதி கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்

வீரமரணமடைந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு நிவாரண நிதியை கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்.

தர்மபுரி:

பாலக்கோடு தாலுகா கம்மாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பூபதி. ராணுவ வீரரான இவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்புவரா மாவட்டத்தில் போர் நடவடிக்கையின்போது கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 4- ந்தேதி வீரமரணம் அடைந்தார்.

இதையடுத்து அவருடைய குடும்பத்திற்கு கார்கில்நிவாரண நிதியிலிருந்து வரப்பெற்ற ரூ.20 லட்சம் நிதிக்கான காசோலையை தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் திவ்யதர்சினி பூபதியின் தாயார் சித்ராவிடம் வழங்கினார்.

அப்போது முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் வெங்கடேஷ்குமார் உடனிருந்தார்.

SCROLL FOR NEXT