மாவட்ட செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி

குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது.

நொய்யல்

நொய்யல் குறுக்குச் சாலையில் உள்ள ரேஷன்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கரூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் சேகர் என்ற குணசேகரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. மொஞ்சனூர் பி.ஆர். இளங்கோ கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கினார். இதில் கட்சி பொறுப்பாளர்கள், ரேஷன்கடை விற்பனையாளர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT