அரியலூர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு கூட்டம் அரியலூரில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளங்கோவன் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக கட்சியின் மாநில குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ.வுமான சின்னதுரை, கட்சியின் மாநில குழு உறுப்பினர் வாலண்டினா கலந்து கொண்டனர். கூட்டத்தில் அரியலூரில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அமைத்து, அதற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். மாவட்டம் முழுவதும் வீடுகள் இல்லாத மக்களுக்கு கணக்கெடுப்பு நடத்தி குடியிருப்பவர்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். மாவட்டத்தில் மணல் மாட்டு வண்டிகளுக்கு திருமானூர், தா.பழூர் மற்றும் செந்துறை வெள்ளாற்று பகுதிகளில் குவாரி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.