பள்ளி மாணவி தற்கொலை 
மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவி தற்கொலை

பள்ளி மாணவி தற்கொலை

சரவணம்பட்டி

கோவை சரவணம்பட்டி பெருமாள் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (49). பேராசிரியர். இவருடைய மனைவி தமிழ்மணி. இவர் சரவணம்பட்டியில் பெண்கள் விடுதி நடத்தி வருகிறார். இவர்க ளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் சாய் ஸ்ரீ நேத்ரா (வயது13) ஆகியோர் உள்ளனர் இதில் சாய் ஸ்ரீ நேத்ரா 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் சாய் ஸ்ரீநேத்ரா தனது பாட்டி வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்பில் படித்து வந்தார். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டதால் ஈஸ்வரமூர்த்தி தனது மகளை வீட்டிற்கு அழைத்து வந்தார். உடலில் வெண்புள்ளி பிரச்சினை இருந்ததால் பள்ளிக்கு சென்றால் மற்ற மாணவர்கள் கேலி கிண்டல் செய்வார்கள் என்று கருதி சாய் ஸ்ரீ நேத்ரா மனவேதனை அடைந்தார். அவரை சமாதானப்படுத்தி பெற்றோர் தூங்க வைத்தனர்.

இதையடுத்து நேற்று காலை பள்ளிக்கு செல்ல சாய் ஸ்ரீ நேத்ராவை எழுப்புவதற்காக அவருடைய தாய் தமிழ்மணி சென்றார். அங்கு சாய் ஸ்ரீ நேத்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து தமிழ்மணி கதறி அழுதார். இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...