மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கருத்தரங்கம்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கருத்தரங்கம் நடந்தது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் அகத் தர மதிப்பீட்டு குழுவின் சார்பில், ஆசிரியரை உணருங்கள் என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் அந்தோணி சகாய சித்ரா வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.

பேராசிரியர் சிஸ்மா பிரான்சிஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், மாணவர்களின் திறமைகளை உணர்ந்து, அவர்களின் முன்னேற்றத்துக்கு ஆசிரியர்கள் உதவியாக இருக்க வேண்டும். நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களது திறன்களை புதுப்பித்து கொள்ள வேண்டும் என்று கூறினார். பேராசிரியர்கள் பாலு, வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் அபுல்கலாம் ஆசாத் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT