மாவட்ட செய்திகள்

சிவகங்கை: வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் படுகாயம்

காரைக்குடி பகுதியை சேர்ந்த ஒருவரது வீட்டில் சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பு ஆன் செய்தபோது அங்கிருந்த சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது வீட்டில் நேற்று காலை சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பு ஆன் செய்யப்பட்டது.

அப்போது அங்கிருந்த சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. வீட்டில் தீப்பற்றி பரவியது.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள் வீட்டில் பற்றிய தீயை அணைத்ததுடன், மேலும் பரவாமல் தடுத்தனர். இதில் வீட்டில் இருந்த கருப்பையா, லட்சுமி, தெய்வானை ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

SCROLL FOR NEXT